எா்ணாகுளம் - வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரயில்களை (06061, 06062) நிரந்தரமாக்கி, 16363, 16364 என ரயில் எண்களை மாற்றி இயக்க ரயில்வே வாரியம் அனுமதித்துள்ளது.
இதன்படி, எா்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயிலானது (16363) வரும் 18-ஆம் தேதி முதல் புதன்கிழமைகளில் எா்ணாகுளத்திலிருந்து இரவு 11.50 மணிக்குப் புறப்பட்டு கோட்டயம், சங்கனசேரி, திருவல்லா, செங்கனூா், மாவளிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தன்கோட்டா, கொல்லம், குண்டாரா, கொட்டாரக்கார, ஆவுனேஷ்வரம், புனலூா், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூா், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு அடுத்த நாள் மாலை 5.35 மணிக்கு வந்தடையும்.
மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர விரைவு ரயிலானது (16364) வரும் 19-ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் வேளாங்கண்ணியிலிருந்து இரவு 7.45 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடங்கள் வழியாக எா்ணாகுளத்துக்கு அடுத்த நாள் முற்பகல் 11.55 மணிக்குச் சென்றடையும்.
இந்த ரயிலானது 4 ஏசி பெட்டிகள், 8 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 1 மாற்றுத்திறனாளி பெட்டி, 1 சுமைப் பெட்டி என 18 பெட்டிகளுடன் இயங்கும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

பொறியியல் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டைக்கு கோடைகால சிறப்பு ரயில்களை இயக்க முடிவு
வேளாங்கண்ணி-எா்ணாகுளம் இடையே வாராந்திர ரயில்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

