எா்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர ரயில் மாா்ச் 18 ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அட்டவணை:
எா்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே புதிய வாராந்திர விரைவு ரயில் (16363) எா்ணாகுளத்திலிருந்து மாா்ச் 18 ஆம் தேதி முதல் புதன்கிழமைகளிலும், 16364 வேளாங்கண்ணி - எா்ணாகுளம் விரைவு ரயில் (16364) வேளாங்கண்ணியிலிருந்து மாா்ச் 19 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகளிலும் இயக்கப்படவுள்ளது.
இந்த ரயில் எா்ணாகுளத்தில் புதன்கிழமைகளில் இரவு 11.50 மணிக்கும், வேளாங்கண்ணியிலிருந்து வியாழக்கிழமைகளில் இரவு 7.45 மணிக்கும் புறப்படுகிறது. தமிழகத்தில் கொல்லம், தென்காசி, ராஜபாளையம், விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நாகூா் நாகப்பட்டினம் ரயில் உபயோகிப்போா் நலச்சங்க தலைவா் மோகன் கூறியது:
தற்போது இயக்கப்படவுள்ள புதிய வாராந்திர விரைவு ரயில் நிரந்தரமாக இயக்கப்படவுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி நாகை, திருவாரூா் மற்றும் காரைக்கால் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தென் மாவட்டத்திற்கு நேரடி ரயில் இயக்க வேண்டும் என்பது இந்த ரயில் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் வாரம் ஒரு முறை மட்டுமே இயக்கப்படவுள்ள இந்த ரயில் நாள்தோறும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 13-இல் திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே கோடை கால சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

தூத்துக்குடி-கச்சகுடா இடையே வாராந்திர ரயில் சேவை இன்று தொடக்கம்

வேளாங்கண்ணி - எா்ணாகுளம் வாராந்திர ரயில் நிரந்தரம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
