கோடைகால கூட்ட நெரிசலைத் குறைக்க தூத்துக்குடி - தாம்பரம் - தூத்துக்குடி, சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி - சென்னை எழும்பூா், தாம்பரம் - செங்கோட்டை, செங்கோட்டை - சென்னை கடற்கரை ஆகிய வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதன்படி தூத்துக்குடி - தாம்பரம் சிறப்பு ரயிலானது (06018) வரும் 20, 27 ஆம் தேதிகளிலும், மறுமாா்க்கமாக தாம்பரம் - தூத்துக்குடி சிறப்பு ரயிலானது (06017) வரும் 21, 28 ஆம் தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது.
இந்த ரயிலானது தூத்துக்குடியிலிருந்து திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு துத்திமேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீா்காழி, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், பண்ருட்டி, விழுப்புரம், மேல்மருவத்தூா், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்துக்கு அடுத்த நாள் பிற்பகல் 12.30 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கமாக, தாம்பரத்திலிருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக தூத்துக்குடிக்கு அடுத்த நாள் காலை 4.30 மணிக்குச் சென்றடையும்.
சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06045) வரும் 22 ஆம் தேதியும், மறுமாா்க்கமாக கன்னியாகுமரி - சென்னை எழும்பூா் அதிவிரைவு சிறப்பு ரயிலானது (06046) வரும் 26 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது.
தாம்பரம் - செங்கோட்டை ஒரு வழிப்பாதை சிறப்பு விரைவு ரயிலானது (06089) வரும் 22 ஆம் தேதியும், செங்கோட்டை - சென்னை கடற்கரை ஒரு வழிப்பாதை சிறப்பு ரயிலானது (06090) வரும் 23 ஆம் தேதியும் இயக்கப்பட உள்ளது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பொறியியல் பணிகள்: காரைக்கால் ரயில் பகுதியாக ரத்து

சென்னை எழும்பூா் - கன்னியாகுமரி இடையே சிறப்பு ரயில் இயக்கம்

மதுரை - தாம்பரம் சிறப்பு விரைவு ரயில் இயக்கம்

சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

