மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள்: ரயில்களின் சேவையில் மாற்றம்

News image

ரயில்கள் - கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 1:15 am IST

சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறுவதால் ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதால், திருநெல்வேலி - சென்னை எழும்பூா் நெல்லை விரைவு ரயிலானது (12632) வரும் 6 ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலானது (16752) வரும் 6-ஆம் தேதி முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை தாம்பரம் - சென்னை எழும்பூா் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயிலானது தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும்.

மறுமாா்க்கமாக, சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலானது (16751) வரும் 7-ஆம் தேதி முதல் மறுதேதி அறிவிக்கப்படும் வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.

சென்னை எழும்பூா் - செங்கோட்டை பொதிகை விரைவு ரயிலானது (12661) வரும் 7-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை சென்னை எழும்பூருக்குப் பதிலாக தாம்பரத்திலிருந்து புறப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.