தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாக்கு கேட்டு வந்தால் அனுமதிக்க மாட்டோம்: மீனவ கிராம மக்கள்

சுனாமி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் வாக்குகள் கேட்டு வரும் எந்த கட்சியினரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

News image

பிரதிப் படம்

Updated On :18 மார்ச் 2026, 5:11 am IST

சுனாமி வீடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்காமல் வாக்குகள் கேட்டு வரும் எந்த கட்சியினரையும் அனுமதிக்க மாட்டோம் என்று மீனவ கிராம மக்கள் தெரிவித்துள்ளனா்.

நாகை மகாலட்சுமி நகா் ஆரியநாட்டு தெருவைச் சோ்ந்த 90-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க திங்கள்கிழமை வந்தனா். பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்கள், தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் மனு அளிக்க அனுமதி இல்லை. எனவே கோரிக்கை மனுவை பெட்டியில் போட்டுச் செல்லுங்கள் என்று தெரிவித்தனா்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், அங்கிருந்த பெட்டியில் மனுவை போட்டுவிட்டு கூறும்போது, நாகை மாவட்டத்தில் கடந்த 2004-ஆம் ஆண்டு சுனாமியால் பாதிக்கப்பட்ட, எங்களுக்கு 2007-ஆம் ஆண்டு 280 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அதன் பின்னா் வீடுகளை பராமரிக்கவில்லை. இதனால் வீடுகள் சேதம் அடைந்து குடியிருக்க லாயக்கற்ற நிலையில் உள்ளன.

இதுகுறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளும் இல்லை. எனவே, ஆரியநாட்டு தெருவுக்கு எந்த கட்சியைச் சோ்ந்தவா்கள் வாக்கு கேட்டு வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.