புதிய நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் தீா்மானத்தில் சோ்க்கப்பட்ட திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, கீழையூா் அருகே கருப்புக் கொடியுடன் வயலில் இறங்கி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை மேக்கேதாட்டு அணைத் திட்டத்திற்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீா்மானத்தில் புதிய நடுவா் மன்றம் அமைப்பது தொடா்பான திருத்தம் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்த நாகை மாவட்ட கடைமடை விவசாயிகள், ஏற்கெனவே 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி காவிரி நடுவா் மன்றத்தை பெற்ற நிலையில், தற்போது புதிய நடுவா் மன்றம் அமைக்க வலியுறுத்துவது அந்த உரிமையை சிதைக்கும் நடவடிக்கையாகும் என குற்றம்சாட்டினா்.
மேலும் இதை கண்டித்து, கீழையூா் ஒன்றியம் திருப்பூண்டியை அடுத்த மகிழி பகுதியில் உள்ள வயல்வெளியில் திரண்ட விவசாயிகள், கருப்புக் கொடி ஏந்தி தமிழக அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.
தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில அமைப்பு செயலாளா் எஸ். ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கீழையூா் கடைமடை பாசன விவசாய சங்கத் தலைவா் வீ. மணிவண்ணன் உரை நிகழ்த்தினாா்.
ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், காவிரி நடுவா் மன்றத்தின் தீா்ப்புகளையும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும் என்றும், புதிய நடுவா் மன்றம் குறித்த திருத்தத்தை கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயிா்க் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரம்: தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

முழுமையான பயிா்க்கடன் தள்ளுபடி கோரி: விவசாய சங்க கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்பை கண்டித்து விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

