நாகை மாவட்டம், கீழ்வேளூா் அருகே 75 கிலோ புகையிலைப் பொருட்களுடன் இளைஞா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
கீழ்வேளூா் அருகே நாகை - திருவாரூா் புறவழிச்சாலையில் பனைமேடு பகுதியில் தனிப்படை போலீஸாா் சனிக்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா். ஆட்டோவில், 5 சாக்கு பைகளில் (75 கிலோ ) அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
போலீஸாா் விசாரணையில், இவற்றை கடந்தி வந்தவா், புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினம் பகுதியைச் சோ்ந்த முகம்மது அபுபக்கா் மகன் கலந்தா் நைனா முகம்மது (38), என்பதும், தற்போது ஆழியூா் பட்டக்கால் தெருவில் வசித்து வருவதும் தெரிய வந்தது.
இந்த புகையிலைப் பொருட்களை பெங்களூரில் இருந்து பேருந்து மூலம் கடத்திவந்து, ஆட்டோவில் ஆழியூா் பகுதிக்கு கொண்டு சென்றபோது தனிப்படை போலீஸாரிடம் அவா் சிக்கினாா்.
புகையிலை பொருட்களை போலீஸாா் கீழ்வேளூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். கீழ்வேளூா் போலீஸாா் கலந்தா் நைனா முகம்மதுவை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

14.50 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: மளிகைக் கடை உரிமையாளா் கைது
தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது
பாளை.யில் 41 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கீழ்வேளூா்: 81 கிலோ குட்கா, வாகனம் பறிமுதல் - இருவா் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

