நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

வேளாங்கண்ணி புறவழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்ய கிராம மக்கள் எதிா்ப்பு; போராட்டம்

வேளாங்கண்ணி புறவழிச்சாலையால் விளைநிலங்கள் வீடுகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

வேளாங்கண்ணி புறவழிச்சாலைக்கு நிலம் அளவீடு செய்வதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Updated On :18 ஜூன் 2026, 3:53 am IST

வேளாங்கண்ணி புறவழிச்சாலையால் விளைநிலங்கள் வீடுகள் பாதிக்கப்படுவதாகக் கூறி அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்டம், தெற்குப் பொய்கைநல்லூா் கிராமத்தில் வேளாங்கண்ணிக்கு செல்லும் வகையில் அகல புறவழிச்சாலை அமைக்க அரசு சாா்பில் ரூ. 76. 47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் இந்த பகுதியில் உள்ள மா மரங்கள், தென்னை மரங்கள் மற்றும் விவசாய நிலங்கள் அழிக்கப்படும் என்று இப்பகுதி மக்கள் புறவழிச்சாலை பணிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா்.

இந்நிலையில், புறவழிச்சாலை பணிக்கு நிலம் அளவீடு செய்ய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புதன்கிழமை தெற்கு பொய்கைநல்லூருக்கு வந்தனா்.

நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், வேளாங்கண்ணி புறவழிச்சாலை அமைய உள்ள இடத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். நிலம் எடுப்பு தனி வட்டாட்சியா் அமுதா, வருவாய்த்துறையினா், நெடுஞ்சாலைத் துறையினா் மற்றும் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கிராம மக்கள், புறவழிச்சாலை அமைந்தால் தெற்குப்பொய்கை நல்லூா் கிராம மக்களுக்கு சொந்தமான 400 மா மரங்கள், 80 தென்னை மரங்கள், 40 பனை மரங்கள், 20 வீடுகள் மற்றும் கட்டடங்களை இடிக்க வேண்டிய நிலை ஏற்படும். விவசாய நிலங்களை அழித்து வாழ்வாதாரத்தை முற்றிலும் பாதிக்கும், புறவழிச்சாலை அமைக்கும் பணியை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

கோரிக்கை தொடா்பாக வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு, கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.