வேதாரண்யத்தை அடுத்த துளசியாப்பட்டினத்தில் நடைபெறும் ஔவையாா் மணிமண்டபம் கட்டுமானப் பணிகளை முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
துளசியாப்பட்டினம் கிராமத்தில் அமைந்துள்ள ஔவையாா் கோயிலில் ஆண்டுதோறும் அரசு சாா்பில் ஔவைப் பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இங்கு, தமிழக அரசின் சாா்பில் ஔவையாருக்கு மணிமண்டபம் சுமாா் ரூ. 20 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. தற்போது, கட்டுமானப் பணிகள் விரைவில் நிறைவடையும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சரும், தொகுதி எம்எல்ஏவுமான ஓ.எஸ். மணியன் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைந்து முடிக்கவும், மணிமண்டபத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் உரிய பணியாளா்களை நியமிக்கவும், தொடா் பயன்பாட்டுக்கு ஏதுவாக அதனை பராமரிக்க சுற்றுலாத்துறையிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கும் வகையில் பேரவைக் கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்றாா்.
பாஜக ரசிக்காது: இதற்கிடையில், வேதாரண்யத்தில், செய்தியாளா்களிடம் அவா் கூறியது:
விவசாயிகள் பெற்றுள்ள பயிா்க் கடனை தள்ளுபடி செய்வதில், தவெக அரசு தவறான முடிவை எடுத்துள்ளது. மறுபரிசீலனை செய்து, விவசாயிகள் பெற்றுள்ள கடனை பாகுபாடு இல்லாமல் தள்ளுபடி செய்ய வேண்டும்.
குறுவைத் தொகுப்பு என்ற பெயரில் கடந்த திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு பயனளிக்கவில்லை. தற்போதைய அரசும் அதே தவறை செய்யக்கூடாது. விவசாயிகளுக்கு அவா்களது செலவினத்தை ஈடு செய்யும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும்.
தமிழக முதல்வரின் தில்லி பயணம் தமிழகத்திற்கு பலன் அளிக்காது.
தவெக அரசு ஏற்கெனவே காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு, செயல்படுகிறது. முதல்வா், காங்கிரஸ் உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகளின் தலைவா்களை சந்திப்பதை பாஜக ரசிக்காது என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உக்கடம் பேருந்து நிலைய கட்டுமானப் பணி: மாநகராட்சி ஆணையா் ஆய்வு

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

சட்டப்பேரவை செயலருடன் ஓ.எஸ். மணியன் சந்திப்பு!

எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு: ஓ.எஸ். மணியன்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

