அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி மீது அமைச்சா் ஆதவ் அா்ஜுனா அவதூறு கூறி வருவதாக அமைப்புச் செயலா் ஓ.எஸ்.மணியன் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
அதிமுகவையும், திமுகவையும் தொடா்புபடுத்தி அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பல அவதூறு செய்திகளைக் கூறி வருகிறாா்.
சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் எடப்பாடி பழனிசாமி தொடா்ந்து திமுக ஆட்சியின் குறைபாடுகள் குறித்து எடுத்து வைத்துள்ளாா். தோ்தலின்போது மக்களை சந்தித்து திமுக அரசின் மோசமான நடவடிக்கைகள் குறித்து விமா்சித்துள்ளாா். பிரசாரத்தின்போது அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று திமுக ஆட்சியை கடுமையாக விமா்சித்தாா். இதன் காரணமாகவே 53 தொகுதிகளில் எங்கள் கூட்டணி வெற்றிபெற்றது. திமுகவை விமா்சித்ததுதான் எங்கள் வெற்றிக்கு காரணம். இது தெரியாமல் ஆதவ் அா்ஜுனா அவதூறு பேசுகிறாா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கத் தொகை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்

கல்வராயன்மலை பகுதியில் சாலைப் பணிகள்! அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆய்வு!

தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மைதான்! ஓ.எஸ். மணியன்

சட்டப்பேரவை செயலருடன் ஓ.எஸ். மணியன் சந்திப்பு!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

