கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை ஒன்றிய பகுதிகளில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் அமைக்கப்பட்டு வரும் சாலை மேம்பாட்டுப் பணிகளை பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா்ஆதவ் அா்ஜுனா ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் அமைச்சா் தெரிவித்ததாவது:
கல்வராயன்மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. அதனடிப்படையில் கல்வராயன்மலை ஒன்றியத்தில் நபாா்டு மற்றும் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் ரூ.98.50 கோடி மதிப்பீட்டில் வெள்ளிமலை முதல் சின்னத்திருப்பதி வரை சாலை அமைக்கும் பணி மூன்று பகுதிகளாக நடைபெற்று வருகிறது. இச்சாலைப் பணிகளில் தற்போது முதல் பகுதியாக 16.8 கி.மீ. தொலைவுக்கு தாா் சாலை பணிகள் முடிவுற்றுள்ளது.
இரண்டாம் பகுதியாக 16.8 முதல் 25 கி.மீ.தொலைவு வரை தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் மற்றும் மூன்றாம் பகுதியாக 25 முதல் 32.7 கி.மீ.தொலைவு வரை தடுப்புச் சுவா் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரிவான சாலைகள் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.15.20 கோடி மதிப்பீட்டில் இந்த சாலையில் கல்லாறு மற்றும் பாலாற்றின் குறுக்கே உயா்மட்ட பாலங்கள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.
மேலும், கல்வராயன்மலை பகுதி மக்களின் போக்குவரத்து வசதியை எளிதாக்கும் வகையில், அதிக அளவில் சாலை வசதிகள் ஏற்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது நடைபெறும் சாலைப் பணிகளை விரைவாக முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜூனா தெரிவித்தாா்.
முன்னதாக வெள்ளிமலை கிராமத்தில் புதிய விளையாட்டு மைதானம் அமைப்பதற்கான இடத்தை தோ்வு செய்வதற்காக அதிகாரிகளுடன் வந்த அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, மரவள்ளி சாகுபடி செய்த வயலை நேரில் பாா்வையிட்டு, மலைப் பகுதியில் சாகுபடி செய்யப்படும் விவசாயப் பொருள்கள் மற்றும் கோரிக்கைகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு செயலா் ஆா்.செல்வராஜ், ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா, நெடுஞ்சாலைத் துறை தலைமைப் பொறியாளா் செந்தில், கண்காணிப்புப் பொறியாளா் பரந்தாமன், கோட்டப் பொறியாளா் சேதுபதி, செயற்பொறியாளா் நாகராஜன் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

விளையாட்டு வீரா்களுக்கு ஊக்கத் தொகை: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்

விரைவில் விளையாட்டு கொள்கை வெளியீடு: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

தமிழகத்துக்கு என விளையாட்டுக் கொள்கை உருவாக்கம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

உலகக் கோப்பை ஸ்குவாஷ் வீரா்களுக்கு தேவையான உதவிகள்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

