சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

விரைவில் விளையாட்டு கொள்கை வெளியீடு: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா

கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத் துறைக்கும் விரைவில் புதிய கொள்கை வெளியிடப்படும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

News image

நிகழ்ச்சியில் பேசிய  அமைச்சா்  ஆதவ்  அா்ஜுனா. உடன் நிதி அமைச்சா் மரிய வில்ஸன்.

Updated On :8 ஜூன் 2026, 1:48 am IST

கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத் துறைக்கும் விரைவில் புதிய கொள்கை வெளியிடப்படும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.

சுங்குவாா்சத்திரம் அடுத்த குன்னம் பகுதியில் இயங்கி வரும் ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரியில், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் மற்றும் ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான 13 வயதுக்குட்பட்டோா் கூடைப்பந்தாட்ட போட்டி தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மற்றும் நிதித்துறை அமைச்சா் நெ. மரியவில்சன் ஆகியோா் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகளை தொடங்கிவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க நிா்வாகிகள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 490-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனா். வரும் 9--ஆம் தேதி வரை சிறுமிகளுக்கும், 9 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறுவா்களுக்கு என தனிந்தனியாக 10 நாள்கள் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.

இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆதவ் அா்ஜனா பேசுகையில்: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு இடங்களை தோ்வு செய்து விளையாட்டு கூட்டமைப்பை உருவாக்கி விளையாட்டு மைதானங்களை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சா்வதேச விளையாட்டு மைதானங்கள் போன்ற விளையாட்டு மைதானங்களை உருவாக்க வேண்டும். விளையாட்டு விடுதிகள் அதிகஅளவில் இல்லை. இதனை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இளைஞா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து விளையாடினால் மன வலிமை ஏற்படுவதோடு உடல் வலிமையையும் ஏற்படும். இதற்கு அதிகளவில் விளையாட்டு மைதானங்கள் தேவைப்படுகின்றன. கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறைக்கும் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.