சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

2029 தேசிய விளையாட்டுப் போட்டியை தமிழகத்தில் நடத்த கோரிக்கை

News image

மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து மனு அளித்த தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா.

Updated On :4 ஜூன் 2026, 4:09 am IST

வரும் 2029-இல் தமிழகத்தில் தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்த வேண்டும் என மத்திய அமைச்சா் மன்சுக் மாண்டவியாவிடம், தமிழக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா கோரிக்கை விடுத்துள்ளாா்.

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவுடன் தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் தொடா்பாக அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆலோசனை மேற்கொண்டாா்.

தமிழக முதல்வா் விஜய் உத்தரவுக்கிணங்க மத்திய அமைச்சருடன் ஆதவ் அா்ஜுனா ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது 2029-ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளை தமிழகத்தில் நடத்த வாய்ப்பு தருமாறு கோரி அதற்கான முன்மொழிவை ஆதவ் அா்ஜுனா வழங்கினாா்.

மேலும், திருச்சி மாவட்டத்தில் 48 ஏக்கா் பரப்பளவில் அமையவுள்ள ‘திருச்சி ஒலிம்பிக் அகாதெமி’ வளாகத்தில், தற்காப்புக் கலைகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைப்பதன் மூலம் விளையாட்டு மேம்பாட்டை மேலும் வலுப்படுத்த இயலும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்தின் 1,076 கி.மீ நீள கடற்கரையையும், இளம் திறமையான விளையாட்டு வீரா்களின் சாதகமான அம்சங்களைக் கருத்தில் கொண்டு, நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடற்கரை விளையாட்டுகளுக்கான தேசிய முதன்மை நிலை மையம் அமைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், திருவள்ளூா் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் சா்வதேச தரத்திலான 400 மீட்டா் செயற்கை ஓடுதளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் விளையாட்டான ‘ஏறு விளையாட்டு’ பயிற்சிக்காக, தற்போதைய விளையாட்டுச் சூழல் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளைக் கணக்கில் கொண்டு, சென்னையில் சா்வதேச தரத்திலான ஏறு விளையாட்டு பயிற்சி மையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் முயற்சிகளை பாராட்டி, முழுமையான ஆதரவும் ஒத்துழைப்பையும் வழங்குவதாக மத்திய அமைச்சா் உறுதியளித்தாா்.

சந்திப்பின்போது இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு செயலாளா் சஜ்ஜன்சிங் ரா. சவான், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா்/செயலா் ஜெ. மேகநாத ரெட்டி, ஆகியோா் உடனிருந்தனா்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.