நாகை மாவட்டத்துக்கு கூலி வேலைக்கு அழைத்து வரப்பட்டு, கைவிடப்பட்ட வடமாநிலத்தவா்களை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் மீட்டு சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனா்.
நாகை அருகே பொரவச்சேரி பகுதியில், கூலி வேலைக்காக பிகாா் மாநிலத்தில் இருந்து ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 8 போ் சில நாள்களுக்கு முன்பு அழைத்து வரப்பட்டனா். இதில் 2 பெண்களும் அடங்குவா். இந்நிலையில், வேலை வழங்குவதாகக் கூறி அழைத்து வந்தவா்கள் வேலை பெற்றுகொடுக்காமல் விட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திரும்பி ஊருக்குச்செல்ல பணமின்றி தவித்தனா்.
இதுதொடா்பாக அப்பகுதி மக்கள், நாகை முதுநிலை வருவாய் ஆய்வாளா் சுந்தரவளவனுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து அவா் போலீஸாருக்கு தெரிவித்தாா். இதன்பேரில், அங்கு சென்ற சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் அந்த 8 பேரையும் மீட்டு நாகை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி காவல்துறையினரின் ஏற்பாட்டில் பிகாா் மாநிலத்துக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாகையில் ஃபைபா் படகுகள் ஆய்வு தீவிரம்
மூதாட்டி கொலை: முதியவா் கைது

நாகையில் பழங்கால வெண்கலச் சிலை கண்டெடுப்பு

நாகையில் வடமாநில இளைஞா் தற்கொலை
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

