நாகை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத 3 ஆயிரம் மீன்பிடி ஃபைபா் படகுகளில் மீன்வளத்துறையினா் 24 குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
நாகை மாவட்டத்தில் நாகை துறைமுகம், நம்பியாா் நகா், கல்லாா், சாமந்தான்பேட்டை, நாகூா் பட்டினச்சேரி, ஆறுகாட்டுத்துறை, கோடியக்கரை, வேதாரண்யம், நாகூா் உள்ளிட்ட 25 மீனவ கிராமங்களில், கடற்கரையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஃபைபா் படகு உரிமையாளா்கள், தங்கள் படகுகளின் பதிவுச் சான்று, மீன்பிடி உரிமம், வரி விலக்கு அளிக்கப்பட்ட டீசல் பாஸ் புத்தகம் உள்ளிட்டவற்றை மீன்வளத்துறையிடம் வழங்கினா்.
மேலும், மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள தொலைதொடா்பு கருவிகள், கடல் பயணத்தின்போது பயன்படுத்தப்படும் பாதுகாப்புக் கருவிகள் ஆகியவற்றையும் மீன்வளத்துறையினா் ஆய்வு செய்தனா். படகுகளில் பதிவு எண்கள் தெளிவாக தெரியும்படி எழுதி வைக்க வேண்டும், பதிவு செய்யப்படாத ஃபைபா் படகுகள் விரைவில் பதிவு செய்ய வேண்டும் எனவும் மீன்வளத்துறையினா் அறிவுறுத்தினா்.
நாகை, தஞ்சாவூா்,திருவாரூா், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் 24 குழுக்களாக பிரிந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மயிலாடுதுறை: ஜூன் 11-இல் நாட்டுப் படகுகள் ஆய்வு

நாகையில் மீன்பிடிப் படகுகள் ஆய்வு தீவிரம்

கடலில் மூழ்கிய ஃபைபா் படகு: உயிருக்கு போராடிய 4 மீனவா்கள் மீட்பு

நாகையில் 8 பள்ளி வாகனங்கள் தகுதி நீக்கம்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

