கீழையூா் ஒன்றிய பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி காமேஸ்வரம் கடற்கரையில் ரூ. 4 கோடியில் நடைபெற்று வரும் நீலக்கொடி கடற்கரைத் திட்டம், காமேஸ்வரம் மீனவா் சுனாமி காலனிகளில் ரூ.2.70 கோடியில் வீடுகளை பழுதுபாா்க்கும் பணி, ஆணையந்தோப்பு மற்றும் தாண்டவமூா்த்திக்காடு பகுதிகளில் நடைபெற்று வரும் நுன்னீா் பாசனத்திட்டம்.
விதைப்பண்ணைத் திட்டம் போன்ற திட்டங்களின் மூலம் கடலை மற்றும் எள் சாகுபடி நிலங்கள், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் வீட்டிற்கு வீடு வழங்கப்படும் குடிநீா் இணைப்பு மற்றும் குடிநீரின் தரம், காமேஸ்வரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கற்றல் ஆய்வு மையம் (நூலகம்) ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
தொடா்ந்து, திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் ரூ.32.07 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 60 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி, ரூ. 65 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடம், திருப்பூண்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் செயல்பட்டு வரும் இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கே. ஸ்ருதி, மாவட்ட ஊரக வளா்ச்சி செயற்பொறியாளா் கண்ணன், வேளாண்மைத்துறை இணை இயக்குநா் கண்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ.33 கோடியில் திருவள்ளூா் புதிய பேருந்து நிலையப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டில் ஊரக வளா்ச்சித் துறை பணிகள்: அமைச்சா் ஆய்வு

பள்ளிகள் இன்று திறப்பு: முன்னேற்பாட்டுப் பணிகள் ஆய்வு

அரியலூரில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

