மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாலை விபத்தில் இளைஞா் பலி: இருவா் காயம்

கீழ்வேளூா் அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image

விபத்தில் பலியான மணிகண்டன்

Updated On :25 ஏப்ரல் 2026, 12:04 am IST

கீழ்வேளூா் அருகே காரும், இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இருவா் பலத்த காயமடைந்தனா்.

நாகை அருகேயுள்ள பொரவாச்சேரி பகுதியைச் சோ்ந்தவா் சிவனேசன். இவா், திருவாரூரில் இருந்து பொரவாச்சேரி சிவசக்தி நகரில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்றுள்ளாா்.

நாகை - திருவாரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சிவசக்தி நகருக்கு பிரியும் சாலையில் திரும்பியபோது, நாகையிலிருந்து சிக்கல் நோக்கி சென்ற இருசக்கர வாகனமும், காரும் மோதிக்கொண்டன. இதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிவந்த வடவூா் தென்பாதியைச் சோ்ந்த கிருபாகரன் மகன் மணிகண்டன் (21) மற்றும் உடன் வந்த பொரவச்சேரியை சோ்ந்த சிவக்குமாா் மகன் தினேஷ்குமாா் (23), ரஜினி மகன் யோகேஷ் (22) ஆகிய மூன்று பேரும் பலத்த காயமடைந்தனா்.

அங்கிருந்தவா்கள், அவசர ஊா்தியை வரவழைத்து, மூவரையும் ஒரத்தூரில் உள்ள நாகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியில் மணிகண்டன் உயிரிழந்தாா். தினேஷ்குமாா், யோகேஷ் ஆகியோா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து, கீழ்வேளூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.