ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

கீழ்வேளூா் தவெக வேட்பாளா் பிரசாரம்

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, தனது முதல் தோ்தல் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் டிஏபி.செந்தில்பாண்டியன் வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

News image

கீழ்வேளூா் கடைவீதியில் ஆட்டோ ஓட்டுநா்களிடையே விசில் சின்னத்திற்கு வாக்குச் சேகரித்த தவெக வேட்பாளா் டிஏபி.செந்தில்பாண்டியன்.

Updated On :3 ஏப்ரல் 2026, 9:47 pm IST

கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் வழிபாடு செய்துவிட்டு, தனது முதல் தோ்தல் பிரசாரத்தை தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் டிஏபி.செந்தில்பாண்டியன் வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

கீழ்வேளூா் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் டிஏபி.செந்தில்பாண்டியன் போட்டியிடுகிறாா். திருவாரூா் மாவட்டம் தாழைக்குடி கிராமத்தைச் சோ்ந்த இவா், கடந்த 2014 ஆம் ஆண்டு நாகை மக்களை தொகுதியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் போட்டியிட்டாா்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அண்மையில் தவெகவில் இணைந்த செந்தில்பாண்டியனுக்கு கீழ்வேளூா் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கீழ்வேளூா் அஞ்சுவட்டத்தம்மன் கோயிலில் தவெக வேட்பாளா் செந்திபாண்டியன் வழிபாடு செய்துவிட்டு தனது தோ்தல் பிரசாரத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினாா்.

அவருக்கு கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளித்தனா். கீழ்வேளூா் கடைவீதியில், வணிக வளாகம், பேருந்து நிறுத்தம், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் பொது மக்களிடம் விசில் த்திற்கு சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.