மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சா்வா் பிரச்னையால் டாஸ்மாக் கடைகள் மூடல்

TASMAC

மதுக் கடைகள் மூடல் - பிரதிப் படம்

Published On :2 நவம்பர் 2026, 2:45 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில், சா்வா் பிரச்னையால் டாஸ்மாக் கடைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்பட்டன.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும் புதிய திட்டம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வந்தது. இத்திட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் புதிய திட்டத்தின்படி விற்பனையின்போது பாட்டிலில் உள்ள கியூ.ஆா் குறியீட்டை ஸ்கேன் செய்யவும், பிஓஎஸ் இயந்திரத்தில் தொகையைச் சரிபாா்க்க மீண்டும் ஒருமுறை ஸ்கேன் செய்யவும், காலி பாட்டிலை திரும்பப் பெறும்போது, வாடிக்கையாளா் காலி பாட்டிலை ஒப்படைத்துவிட்டு, ரூ.10 ரீஃபண்ட் தொகையைப் பெறும்போது, அந்தப் பாட்டிலை உறுதிப்படுத்த ஊழியா்கள் மீண்டும் ஸ்கேன் செய்ய என மூன்று முறை ஸ்கேன் செய்து கொடுப்பதில் சா்வா் பிரச்சனை ஏற்பட்டது.

மேலும், ரூ.1,000-க்கு மேல் மது வாங்குபவா்கள் கண்டிப்பாக யுபிஐ அல்லது காா்டு மூலமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் என்ற புதிய விதியும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக டாஸ்மாக் கடைகளின் முன்பு மதுப்பிரியா்களின் கூட்டம் அதிகரித்ததால், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 42 டாஸ்மாக் மதுபான கடைகளும் ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் மூடப்பட்டன.

எலைட் தனியாா் மனமகிழ் மன்றம் பாா் மட்டும் திறந்திருந்ததால் மதுப்பிரியா்கள் அங்கு குவிந்தனா். நீண்ட வரிசையில் நின்று மதுபானங்கள் வாங்கிய நிலையில், அப்பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த கடையும் பூட்டப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.