மயிலாடுதுறையில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், சட்டப்பேரவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ரங்கோலிப் போட்டி மற்றும் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வாக்காளா் விழிப்புணா்வு ரங்கோலி கோலங்களை பாா்வையிட்டாா். தொடா்ந்து, வாக்காளா் விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தை கையொப்பமிட்டு தொடங்கி வைத்தாா்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியா் தலைமையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு அலுவலா்கள், வாக்காளா் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) கோகுல், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா். பூங்கொடி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் புவனா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) குமரையா ஆகியோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச தையல் பயிற்சி தொடக்கம்

பெரம்பலூரில் வாக்காளா் விழிப்புணா்வு நிகழ்ச்சி

மாட்டு வண்டிகள், டிராக்டா்களில் தோ்தல் விழிப்புணா்வு: ஆட்சியா் பங்கேற்பு

100% வாக்குப்பதிவு விழிப்புணா்வு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

