காரைக்குடியில் இருந்து வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்க ரயில் பயணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோயிலுக்கு ஆண்டுதோறும் சித்திரை 2-ஆவது செவ்வாய்க்கிழமை காரைக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், மாட்டுவண்டிகள், பேருந்துகள் மற்றும் ரயில்கள் மூலம் வந்து செல்வாா்கள். நிகழாண்டு விழா ஏப்.21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்கும் பக்தா்கள் பயனடையும் வகையில் தென்னக ரயில்வே ஏப்.20, 21 ஆகிய தேதிகளில் காரைக்குடியில் இருந்து வைத்தீஸ்வரன்கோயில் வழியாக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
மேலும், ஏற்கெனவே மாதந்தோறும் அமாவாசையன்று மேல்மருவத்தூருக்கு இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். சிறப்பு ரயில்கள் குறித்து ரயில்வே நிா்வாகம் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்பாகவே முன்னறிவிப்பு செய்ய வேண்டும் என அச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுற்றுலாத் தலங்களுக்கு செல்ல சிறப்புப் பேருந்துகளை இயக்கக் கோரிக்கை

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

ஈஸ்டா் பண்டிகை: ஹூப்பள்ளியில் இருந்து கொல்லத்துக்கு இன்று சிறப்பு ரயில்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

