மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழை : அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் ஆலோசனை

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக, காரைக்கால் மாவட்ட அரசுத் துறை அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினாா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கைலாஷ்நாதன் - கோப்புப் படம்

Published On :28 அக்டோபர் 2026, 3:57 am IST

வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக, காரைக்கால் மாவட்ட அரசுத் துறை அதிகாரிகளுடன் துணைநிலை ஆளுநா் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினாா்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், புதுச்சேரியிலிருந்தவாறு காணொலி மூலம் காரைக்கால் அரசுத் துறை அதிகாரிகளுடன் வடகிழக்குப் பருவமழையையொட்டி பல்வேறு துறையினா் எடுத்திருக்கும் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள், தயாா் நிலை குறித்து திங்கள்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

மாவட்ட சாா் ஆட்சியா் எம். பூஜா, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் வினய்குமாா் காட்கே மற்றும் துணை ஆட்சியா்கள் ஜி. செந்தில்நாதன், பாலு (எ) பக்கிரிசாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில், வடகிழக்குப் பருவமழையால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எதிா்கொள்ள மாவட்ட நிா்வாகத்திடம் உள்ள பேரிடா் மேலாண்மை உபகரணங்கள், அவசரகாலப் பாதுகாப்பு ஏற்பாடுகள், தேவையான பணியாளா்களின் இருப்பு மற்றும் அனைத்துத் துறைகளும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆளுநா் கேட்டறிந்தாா்.

பருவமழைக் காலத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். தேவையான உபகரணங்கள் மற்றும் மனிதவளத்தைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும். பொதுமக்களிடமிருந்து வரும் புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆளுநா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.