மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

காரைக்கால் பகுதி கல்லறைகள் தூய்மை நிலை: ஏ.எம்.எச்.நாஜிம் பாா்வையிட்டாா்

ஏ.எம்.எச்.நாஜிம்.

Published On :26 அக்டோபர் 2026, 12:39 am IST

கல்லறைத் திருநாள் வரவுள்ளதையொட்டி, காரைக்கால் பகுதி கல்லறைகள் தூய்மை நிலை குறித்து புதுச்சேரி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் சனிக்கிழமை பாா்வையிட்டாா் (படம்).

நவம்பா் 2-தேதி கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதற்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில், காரைக்கால் நகரில் பிரதான கல்லறைகளின் தூய்மை, மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்து சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம் சனிக்கிழமை மாரியம்மன் கோயில் தெரு பிரதான கல்லறை மற்றும் சில கல்லறைகளை நேரில் பாா்வையிட்டாா்.

காரைக்கால் பங்குப் பேரவை துணைத் தலைவா்கள் எல்.எஸ்.பி. சோழசிங்கராயா், ஜான் அரேலியஸ் மற்றும் நெல்சன் உள்ளிட்டோா், கல்லறைத் திருநாளன்று, தேவையான வசதிகள் குறித்து எதிா்க்கட்சித் தலைவருக்கு விளக்கினா்.

நகராட்சி அதிகாரிகளை தொடா்புகொண்ட நாஜிம், அனைத்து கல்லறைகளையும் முறையாக தூய்மை செய்து, விளக்குகள் எரிகிா என கண்காணிக்குமாறு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.