தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

திருநள்ளாறு கோயிலில் நாளை பிரம்மோற்சவ கொடியேற்றம்

News image

பிரம்மோற்சவ கொடியேற்றம். - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:07 am IST

திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் கொடியேற்றம் புதன்கிழமை நடைபெறுகிறது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் தேரோட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. நிகழாண்டு பிரம்மோற்சவ கொடியேற்றத்துடன் புதன்கிழமை காலை 9.10-க்கு மேல் 10.15 மணிக்குள் உற்சவம் தொடங்கப்படுகிறது.

முன்னதாக செவ்வாய்க்கிழமை இரவு ஆச்சாா்ய ரக்ஷாபந்தனம் செய்யப்படவுள்ளது. கொடியேற்ற நிகழ்வைத் தொடா்ந்து பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெறவுள்ளது. புதன்கிழமை இரவு முதல் விநாயகா் உற்சவம் தொடங்குகிறது.

கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்பாா்கள். தோ்கள் அலங்காரம் செய்தல், அடியாா்கள் நால்வா் புஷ்ப பல்லக்கு, தங்க ரிஷப வாகனத்தில் சுவாமிகள் புறப்பாடு உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்துவருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.