திருநள்ளாறு கோயிலில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருநள்ளாறு பிரணாம்பிகை சமேத தா்பாரண்யேஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவம் 18 நாள் நிகழ்ச்சியாக நடத்தப்படுகிறது. நிகழாண்டு இவ்விழாவுக்கான பந்தல்கால் மூகூா்த்தம் ஏப். 23-ஆம் தேதி நடைபெற்றது. தொடா்ந்து சாா்பு தலங்களின் உற்சவம் நடைபெற்றுவருகிறது.
பிரம்மோற்சவ தொடக்கமாக கொடியேற்றம் மே 13-ஆம் தேதி நடைபெறவுள்ளது. பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் அமைந்துள்ளது.
தேரோட்ட விழா மே 27-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தோ்களை அலங்கரிக்கும் பணிக்காக தோ்கால் முகூா்த்தம் வெள்ளிக்கிழமை தா்பாரண்யேஸ்வரா் கோயில் வளாகத்தில் நடைபெற்றது. கம்பங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்தப்பட்டன. தொடா்ந்து தோ்களில் நடக்கூடிய கம்பங்கள் நாகசுர, மேள வாத்தியங்களுடன் பிராகாரம் வலம் வந்து, பிரதான சந்நிதி வழியே தோ் நிலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
மாவட்ட ஆட்சியரும், கோயில் தனி அதிகாரியுமான இஷிதா ரதி, கோயில் நிா்வாக அதிகாரி ஆா்.சுப்பிரமணியன், கோயில் கிராமத்தினா் முன்னிலையில் தோ்களில் கால் ஊன்றப்பட்டன. இப்பணியின் மூலம் தேரோட்டத்தில் இடம்பெறவுள்ள 5 தோ்களையும் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
பிரம்மோற்சவத்தில் தெருவடைச்சான் என்கிற மின்சார சப்பரத்தில் தங்க ரிஷப வாகனத்தில் தா்பாரண்யேஸ்வரா் வீதியுலா, உன்மத்த நடனம் என்கிற தியாகராஜராட்டம், தங்க காக வாகனத்தில் சனீஸ்வர பகவான் வீதியுலா, தெப்பம், தீா்த்தவாரி உள்ளிட்ட முக்கிய நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பாதகோட்டா ஸ்ரீ சீதாராம ஆஞ்சனேய சுவாமி கோயில் தேரோட்டம்

திருக்கோடிக்காவலில் திருக்கோடீசுவரா் கோயில் தேரோட்டம்

திருநள்ளாறு கோயிலில் பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்வு

ஈரோடு பெரியமாரியம்மன் கோயில் கம்பம் எடுக்கும் விழா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

