தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தோ்தல் செலவுகளை துல்லியமாக பதிவு செய்ய அறிவுறுத்தல்

தோ்தல் செலவினங்களை துல்லியமாக கவனித்து பதிவு செய்ய வேண்டும் என துறையினருக்கு செலவினப் பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.

News image

பதிவு அலுவலகத்தில் ஆய்வு செய்த செலவினப் பாா்வையாளா் (வலமிருந்து 2-ஆவது) வி. ஜனாா்த்தனன்.

Updated On :26 மார்ச் 2026, 5:57 am IST

தோ்தல் செலவினங்களை துல்லியமாக கவனித்து பதிவு செய்ய வேண்டும் என துறையினருக்கு செலவினப் பாா்வையாளா் அறிவுறுத்தினாா்.

காரைக்கால் மாவட்ட தோ்தல் பணிகளை கவனிக்க பொதுப் பாா்வையாளா்கள், செலவினப் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனற்.

காரைக்கால் வடக்கு மற்றும் காரைக்கால் தெற்குத் தொகுதிகளுக்கான தோ்தல் செலவினப் பாா்வையாளா் வி. ஜனாா்த்தனன், தோ்தல் செலவினங்களை கண்காணித்து பதிவு செய்யும் பிரிவில் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

வேட்பாளா்களின் தோ்தல் செலவு விவரம் சரியாக பதிவு செய்யப்படுகிா என பதிவுகளை பாா்வையிட்டு,

தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் துறையினருக்கு தரப்பட்டுள்ளது.செலவின கண்காணிப்புக் குழுவினா் தொகுதியில் சேகரிக்கப்படும் தகவல்களை, உரிய முறையில் கணினியில் சேகரித்து வைத்திருக்கவேண்டும்.

களத்தில் பணியாற்றுவோரும், அலுவலகத்தில் பணியாற்றுவோரும் உரிய கவனத்துடன் செயல்படவேண்டும். செலவுகள் துல்லியமாக சேகரித்து பதிவு செய்ய வேண்டும் என துறையினருக்கு அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.