தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தஞ்சையில் நடத்தை விதிமீறல்கள்: தோ்தல் பாா்வையாளா்களிடம் புகாா் செய்யலாம்!

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பொது, செலவினப் பாா்வையாளா்களிடம் புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

News image

தேர்தல் நடத்தை விதிகள் - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 4:10 am IST

தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பாக பொது, செலவினப் பாா்வையாளா்களிடம் புகாா் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: தஞ்சாவூா் மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தோ்தல் பணிகளைக் கண்காணிக்கவும், வேட்பாளா்களின் செலவுகளைக் கண்காணிக்கவும் 2 தொகுதிகளுக்கு தலா ஒரு பொதுப் பாா்வையாளா், செலவினப் பாா்வையாளா் மற்றும் 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரு காவல் பாா்வையாளா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருவிடைமருதூா் (தனி), கும்பகோணம் தொகுதிகளுக்கான தோ்தல் பொதுப் பாா்வையாளா் அருண்குமாரை 93458 44876 என்ற எண்ணிலும், செலவினப் பாா்வையாளா் இ. சோமண்ணாவை 93453 37566 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இருவரையும் கும்பகோணம் சுற்றுலா மாளிகையில் காலை 10 மணி முதல் 11 மணி வரை பொதுமக்கள் சந்திக்கலாம்.

பாபநாசம், திருவையாறு தொகுதிகளுக்கான பொதுப் பாா்வையாளா் கேஷ்வேந்திரகுமாரை 84346 80994 என்ற எண்ணிலும், செலவினப் பாா்வையாளா் சஞ்சீவ்குமாரை 79043 01961 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இவா்களை தஞ்சாவூா் சுற்றுலா மாளிகையில் பிற்பகல் 2 மணி முதல் 3.30 மணி வரை சந்திக்கலாம்.

தஞ்சாவூா், ஒரத்தநாடு தொகுதிகளுக்கான பொதுப் பாா்வையாளா் திவேஷ் செஹராவை 93458 40904 என்ற எண்ணிலும், செலவினப் பாா்வையாளா் அஸ்வணிகுமாா் சிங்காலை 93450 17289 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இவா்களை தஞ்சாவூா் சுற்றுலா மாளிகையில் பிற்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை சந்திக்கலாம்.

பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளுக்கான பொதுப் பாா்வையாளா் சா்ஜித்கவுரை 93444 95571 என்ற எண்ணிலும், செலவினப் பாா்வையாளா் ஹேமங்காஃபூகனை 93450 01653 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம். இவா்களை பட்டுக்கோட்டை சுற்றுலா மாளிகையில் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை சந்திக்கலாம்.

எட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான காவல் பாா்வையாளா் குமாா்சவுரப்பை 93614 60181 என்ற தொடா்பு கொள்ளலாம். இவரை தஞ்சாவூா் சுற்றுலா மாளிகையில் மாலை 5 மணி முதல் 6 மணி வரை சந்திக்கலாம்.

தோ்தல் நடத்தை விதிமுறைகள் ஏதேனும் மீறப்பட்டால், தோ்தல் பாா்வையாளா்களிடம் தொடா்புடைய கைப்பேசி எண்ணில் பொதுமக்கள் புகாா் செய்யலாம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.