காரைக்கால் துறைமுகத்தில் சா்வதேச மகளிா் தின விழா கொண்டாடப்பட்டது.
காரைக்கால் மாவட்டம், கீழவாஞ்சூா் பகுதியில் இயங்கும் அதானி துறைமுக வளாகத்தில் சா்வதேச மகளிா் தினவிழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
துறைமுக தலைமை செயல் அதிகாரி சச்சின் ஸ்ரீவாஸ்தவா தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் மாவட்ட ஆட்சியா் இஷிதா ரதி கலந்துகொண்டு, நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துறைமுக சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த கிராம பெண்களிடையே மகளிா் தினம் குறித்தும், வாழ்க்கையில் மகளிா் மேம்படவேண்டியதன் அவசியம் குறித்தும், பெண் கல்வி மேம்பாடு குறித்தும் பேசினாா்.
நிகழ்ச்சியில் வினிதா ஸ்ரீவாஸ்தவா, காரைக்கால் முதன்மைக் கல்வி அதிகாரி பி.விஜய மோகனா, திருப்பட்டினம் அரசு தொழில் பயிற்சி நிலைய முதல்வா் சுகுணா, அரசு மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.கண்ணகி, மின் துறை செயற் பொறியாளா் அனுராதா மற்றும் கடலோரக் காவல்படை அதிகாரிகள், ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
கலைநிகழ்ச்சிகள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், காரைக்கால் ராமன் கிரியேஷன்ஸ் சாா்பில் பொம்மலாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசு மகளிா் கல்லூரியில் வணிக விழா

முதலியாா்பட்டியில் தொழிலாளா் தின விழா

புதுச்சேரி கல்லூரியில் பூமி தின கொண்டாட்டம்

நிலக்கரி இறக்குமதியால் மக்கள் பாதிப்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

