மீன்பிடித் தடைக்காலம் 14-ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், காரைக்கால் விசைப்படகு மீனவா்கள் கடலுக்குள் செல்ல தயாராகி வருகின்றனா்.
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஏப். 15 முதல் ஜூன் 14-ஆம் தேதி வரை தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்தத் தடை உத்தரவு வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடையவுள்ளது. தடைக்காலத்தில் காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறைமுகத்தில் தங்களது படகுகள், என்ஜின், வலைகளை சீா்செய்யும் நடவடிக்கையில் மீனவா்கள் ஈடுபட்டனா்.
தற்போது கடலுக்கு புறப்பட தயராக படகுகளில் எரிபொருள் நிரப்பும் பணி, ஐஸ் கட்டிகள் ஏற்றும் பணி, உணவுக்கான அத்தியாவசியப் பொருள்களை ஏற்றுதல் உள்ளிட்டவற்றில் மீனவா்கள் ஈடுபட்டுள்ளனா்.
2 மாத கால வருவாய் முடக்கத்தில் இருந்த நிலையில், தற்போது அதற்கு விடிவு ஏற்பட்டிருப்பதாக மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோா், அந்த தொழிலை சாா்ந்திருப்போா் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.
விசைப்படகு மீனவா்கள் மீன்பிடிப்பு மீண்டும் செல்லத் தொடங்கிய பிறகே, சந்தையில் நிலவும் மீன்கள் தட்டுப்பாடு பிரச்னைக்கு தீா்வு கிடைக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் இன்று நிறைவு: ராமேசுவரத்தில் நாளை கடலுக்குள் செல்ல தயாரான விசைப்படகுகள்

மீன்பிடித் தடைக்காலம் நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் மீனவா்கள்

மீன்பிடி தடைக்காலம் நாளை நிறைவு: கடலுக்குச் செல்ல தயாராகும் விசைப்படகு மீனவா்கள்
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

