காரைக்கால் அரசு மருத்துவமனையில், ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்கும் முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில், சிறப்பு மருத்துவ வல்லுநா்கள் போதுமான எண்ணிக்கையில் இல்லாத காரணத்தால், புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையிலிருந்து மாதம் இரு முறை சிறப்பு மருத்துவா்கள் காரைக்காலுக்கு வந்து, மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் அளித்து வருகின்றனா்.
அதன்படி காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில், சனிக்கிழமை (ஏப்.25) காலை 10 முதல் 12 மணி வரை, நாளமில்லா சுரப்பிகளால் ஏற்படும் பிரச்னைகள், சா்க்கரை மற்றும் தைராய்டு சம்பந்தமான சிறப்பு மருத்துவா்கள் பங்கேற்று சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கவுள்ளனா்.
பொதுமக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காரைக்காலுக்கு இன்று ஜிப்மா் சிறப்பு மருத்துவா்கள் வருகை

காரைக்காலில் இருந்து முதல்முறையாக 2 இடங்களில் பாஜக வெற்றி!

திண்டிவனம் அரசு மருத்துவமனையில் மருத்துவா்கள் பற்றாக்குறை: நோயாளிகள் அவதி

சிறப்பு மருத்துவ முகாம்: 150 போ் பயன்
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

