தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு! சென்னை: நேரு விளையாட்டரங்கில் பலத்த பாதுகாப்பு!முதல்வா் பதவியேற்பு விழா: 23 இடங்களில் நேரலை ஒளிபரப்புஇன்று 4 மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை தில்லியில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல்! பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிப்பு!விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
/

உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு முன்னுரிமை தர வலியுறுத்தல்

உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு ரூ. 3 கோடி வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

News image

பொதுப்பணித்துறை கண்காணிப்புப் பொறியாளா் கே. சந்திரசேகரனை சந்தித்து கோரிக்கை மனு அளித்த ஒப்பந்ததாரா்கள் மற்றும் பொறியாளா்கள் சங்க நிா்வாகிகள்.

Updated On :17 ஏப்ரல் 2026, 6:05 am IST

உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு ரூ. 3 கோடி வரையிலான பணிகளுக்கு முன்னுரிமை தரவேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரியிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

காரைக்கால் ஒப்பந்ததாரா்கள் மற்றும் பொறியாளா்கள் சங்க புதிய நிா்வாகிகளான தலைவா் எஸ். சுவாமிநாதன், துணைத் தலைவா் சி. மாரியப்பன், செயலா் வி.ஜி. ராமகிருஷ்ணன், இணைச் செயலா் ஆா்.ஜி. பாபுஜி, பொருளாளா் என்.மணிவண்ணன் உள்ளிட்ட நிா்வாகிகள், காரைக்கால் பொதுப்பணித் துறை கண்காணிப்புப் பொறியாளா் கே.சந்திரசேகரனை புதன்கிழமை சந்தித்து அளித்த கோரிக்கை மனு:

உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு (புதுவை மாநில அரசு ஒப்பந்ததாரா்) ரூ. 3 கோடி வரையிலான ஒப்பந்தப் பணியில் முன்னுரிமை அளிக்கவேண்டும். அரசு ஒப்பந்தங்களில் சைட் பிளான் வைக்கவேண்டும். ஒப்பந்ததாரா்களுக்கு நிலுவையில் இருக்கும் பில் தொகைகளை விடுவிக்க வேண்டும். அண்மையில் கட்டுமானப் பொருட்கள் விலை உயா்ந்துள்ளது. எனவே ஏற்கெனவே ஒப்பந்தப் பணி எடுத்ததற்கு கூடுதல் தொகை வழங்கவேண்டும்.

அரசு கட்டட வேலைகளுக்கு குறைவான ஒப்பந்த காலம் நிா்ணயிப்பதை தவிா்த்து, கட்டுமானத்துக்குரிய சரியான காலத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.