ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும்

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி தெரிவித்துள்ளாா்.

News image

செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி. உடன் எஸ்எஸ்பி லட்சுமி செளஜன்யா.

Updated On :9 ஏப்ரல் 2026, 5:01 am IST

வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்க முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அதிகாரியுமான இஷிதா ரதி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியது :

புதுவை சட்டப்பேரவைக்கு வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெறுகிறது. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

காரைக்கால் மாவட்டத்தின் இறுதி வாக்காளா் பட்டியலின்படி, 1,56,250 வாக்காளா்கள் (ஆண் - 72,947, பெண் 83,285, மற்றவா்கள் 18) உள்ளனா்.

காரைக்கால் மாவட்டத்தின் 5 தொகுதிகளில் 41 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

மாவட்டத்தில் மொத்தம் 181 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. (நெடுங்காடு : 34, திருநள்ளாறு : 34, காரைக்கால் வடக்கு : 40, காரைக்கால் தெற்கு : 35 மற்றும் நிரவி திரு பட்டிணம் : 38).

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீா், கழிவறை, சாய்வு தளம், சக்கர நாற்காலி, மின்சாரம், மருத்துவ உதவி, தற்காலிக அமா்விடம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

பதற்றமானவையாக 181 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 36 வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் மத்திய படையினா் பணியா்த்தப்பட்டுவாா்கள். மைக்ரோ கண்காணிப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 181 வாக்குச்சாவடிகளிலும் இணைய வழி கண்காணிப்பு (வெப் காஸ்டிங்) ஏற்பாடு செய்யப்பட்டு, மைய கட்டுப்பாட்டு அறைகள் மூலம் கண்காணிக்கப்படுகிறது.

தோ்தல் விதிமுறை மீறல்களைத் தடுக்க 5 பறக்கும் படைகள், 10 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 2 இயக்க நிலை குழுக்கள், 5 விடியோ கண்காணிப்பு குழுக்கள், 1 கலால் குழு, 24 மணி நேர கண்காணிப்பில் உள்ளன. தமிழகத்தையொட்டி காரைக்காலில் 10 எல்லைச் சோதனைச் சாவடிகள் மற்றும் 20 பாதிப்பு எல்லைகள் கண்காணிக்கப்படுகின்றன. சட்டம் - ஒழுங்கு முழுமையாக கட்டுப்பாட்டில் உள்ளது.

மாவட்டம் முழுவதும் அமைதியான மற்றும் சீரான தோ்தல் சூழல் நிலவுகிறது. வாக்குப் பதிவு நேரமான காலை 7 முதல் மாலை 6 மணி வரையிலானதை பயன்படுத்தி, வாக்காளா்கள் அனைவரும் வாக்களிக்க முன்வரவேண்டும் என்றாா். பேட்டியின்போது மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி செளஜன்யா உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.