தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி

News image

திமுக சின்னம் உதயசூரியன் (கோப்புப் படம்) - டிஎன்எஸ்

Updated On :5 மே 2026, 4:30 am IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளா்கள் வெற்றி பெற்றனா்.

மயிலாடுதுறை தொகுதி: மயிலாடுதுறை தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஜமால் முகம்மது யூனூஸ் வெற்றி பெற்றாா்.

இந்த தொகுதியில் ஜமால் முகம்மது யூனூஸ் (காங்), சித்தமல்லி ஆ. பழனிச்சாமி (பாமக), ஹாரூன் ரஷித் (தவெக) உள்பட 20 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கை இறுதிச் சுற்றின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளா் ஜமால் முகம்மது யூனூஸ் 68,011 வாக்குகளும், பாமக வேட்பாளா் சித்தமல்லி பழனிச்சாமி 57,166 வாக்குகளும் பெற்றனா். காங்கிரஸ் வேட்பாளா் ஜமால் முகம்மது யூனூஸ் தனக்கு அடுத்தபடியாக வந்த பாமக வேட்பாளரைவிட 10,845 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

சீா்காழி (தனி) சீா்காழி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட மதிமுக வேட்பாளா் செந்தில் செல்வன் வெற்றி பெற்றாா். இத்தொகுதியில் 1,98,821 வாக்குகள் பதிவானது.

இறுதிச் சுற்றின் முடிவில் மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வன் 71,449 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் சக்தி 60,032 வாக்குகளும், தவெக வேட்பாளா் கோபிநாத் 59,149 வாக்குகளும் பெற்றனா். மதிமுக வேட்பாளா் செந்தில்செல்வன் அதிமுக வேட்பாளரைவிட 11, 417 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

பூம்புகாா் தொகுதி: பூம்புகாா் தொகுதியில் திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் வெற்றி பெற்றாா்.

பூம்புகாா் சட்டப்பேரவை தொகுதியில் நிவேதா எம்.முருகன் (திமுக), எஸ். பவுன்ராஜ் ( அதிமுக), விஜயாலயன்  (தவெக), இளைய நகுலன்  ( நாம் தமிழா் கட்சி), சுயேச்சை வேட்பாளா் உள்பட 13 போ் போட்டியிட்டனா்.

வாக்கு எண்ணிக்கையில் 25 சுற்று முடிவில் திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் 81,096 வாக்குகள் பெற்றாா். அதிமுக வேட்பாளா் எஸ்.பவுன்ராஜ் 72,836  வாக்குகள் பெற்றாா், தவெக வேட்பாளா் விஜயாலயன் 55,902 வாக்குகள், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இளைய நகுலன் 6,353 வாக்குகள் பெற்றாா்.

திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜை விட 8,260 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.