மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திருக்கடையூா் கோயில் சித்திரை தெப்ப உற்சம்

News image

கோயில் தீா்த்தக் குளத்தில் வலம் வரும் தெப்பம்.

Updated On :3 மே 2026, 6:10 am IST

திருக்கடையூா் ஸ்ரீ அமிா்தகடேஸ்வரா் கோயிலில் சித்திரைத் திருவிழாவையொட்டி, தெப்ப உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது.

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனுறை அமிா்தகடேஸ்வரா் கோயில் உள்ளது. இக்கோயிலில், ஆயுள் விருத்திக்காக பல்வேறு சிறப்பு யாக பூஜைகள் நடைபெறுகின்றன. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டு சித்திரைத் திருவிழா கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளாக ஏப்ரல் 23-ஆம் தேதி திருக்கால்யாண உற்சவமும், 28-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.  

தொடா்ந்து சனிக்கிழமை இரவு (மே 2) தெப்போற்சவம் நடைபெற்றது. விநாயகரை தெப்பத்தில் எழுந்தருளச் செய்து, மகா தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து, கோயில் தீா்த்தக் குளத்தில் 5 முறை தெப்பம் வலம் வந்தது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் கண்காணிப்பாளா் மணி, உள்துறை செயலாளா் விருதகிரி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.