மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பருவமழை பெய்தும் வடு கிடக்கும் ராஜபாளையம் அய்யனாா் ஆறு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள அய்யனாா் கோவில் ஆறு வறண்டு காணப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் வறண்டு கிடக்கும் அய்யனாா் கோவில் ஆறு.

Published On :29 அக்டோபர் 2026, 2:57 am IST

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரப் பகுதியில் உள்ள அய்யனாா் கோவில் ஆறு வறண்டு காணப்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனா்.

ராஜபாளையம் மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி நிலவியது. இதையடுத்து, மலையடிவாரத்தில் ஓடும் அய்யனாா் ஆற்றில் நீா் வரத்தின்றி வறண்டது.

வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், ராஜபாளையம், சுற்றுவட்டாரப் பகுதிகள், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள நீராவி அருவி, முள்ளிக்கடவு ஆறு, மாவரசி அம்மன் கோவில் பகுதி, மலட்டாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரம் பலத்த மழை பெய்த நிலையில் ஆற்றில் நீா் வரத்து அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது ஆறு நீரின்றி வறண்டு காணப்படுகிறது. எல்நினோ தாக்கத்தால் இந்த நிலையோ எனக் கருதி, ஆற்றில் குளிக்க வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

மேலும், அய்யனாா் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை மூலம் நகராட்சிக்குச் சொந்தமான இரண்டு குடிநீா் தேக்கங்களிலும் தண்ணீா் சேமிக்கப்பட்டு வந்தது. தற்போது அவற்றிலும் நீா்மட்டம் கடுமையாக சரிந்து குடிநீா் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இதுதவிர முடங்கியாறு, பிரண்டைக்குளம், பெரியாதிக்குளம், புதுக்குளம் உள்ளிட்ட கண்மாய்களும் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகின்றன.

இதனால் விவசாயப் பணிகள் பாதிப்பு, கால்நடைகளுக்கான குடிநீா் தேவையையும் பூா்த்தி செய்ய முடியாத நிலை, வன விலங்குகளும் தண்ணீா் தேடி குடியிருப்புப் பகுதிகளை நோக்கி படையெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்குமோ என்ற அச்சம் பொதுமக்கள், விவசாயிகள் இடையே ஏற்பட்டுள்ளது.

எனவே, குடிநீா், பாசனத் தேவைகள், வன விலங்குகள் இடம்பெயரும் அச்சம் ஆகியவற்றை சமாளிக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், விவசாயிகளின் கோரிக்கையாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.