மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வத்திராயிருப்பில் திட்டப்பணிகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வத்திராயிருப்பு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

குன்னூா் ஊராட்சியில் மத்திய நாற்றங்கால் பண்ணையை ஆய்வு செய்த விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி .

Published On :22 அக்டோபர் 2026, 3:37 am IST

வத்திராயிருப்பு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சி திட்டப் பணிகளை விருதுநகா் மாவட்ட ஆட்சியா் ஷரண்யா அறி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்‘ என்ற திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா். இதன்படி, குன்னூா் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணை, ரெங்கப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில் மரக்கன்றுகள் பராமரிப்பு, பிளவக்கல் பெரியாறு அணையின் நீா் இருப்பு, வரத்து, மதகுகளின் பராமரிப்பு, செயல்பாடுகள், ரூ.10 கோடியில் புனரமைக்கபடும் பிளவக்கல் அணை பூங்கா ஆகியவற்றை ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

வத்திராயிருப்பு கிளை நூலகக் கூடுதல் கட்டடத்தில் ரூ.9.70 லட்சத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டு வரும் பணிகள், வத்திராயிருப்பு பேரூராட்சி, ஆகாசம்பட்டி அங்கன்வாடி மையம், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பெருந்தலைவா் காமராஜா் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், நியாயவிலைக் கடை ஆகியவற்றையும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து வத்திராயிருப்பு கால்நடை மருந்தகம், அரசு போக்குவரத்துக்கழக பணிமனை, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நிலங்களின் கணக்கீடு பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

இதைத்தொடா்ந்து, அனைத்துத் துறை அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீா், சுகாதாரம், சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள், சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டுமென ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ஆனந்தி, திட்ட இயக்குநா் (மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை) வானதி, தனித் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) மோகனா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள், அனைத்து அரசுத் துறை உயா் அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.