சாத்தூா் அருகே கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் புதன்கிழமை மூழ்கி உயிரிழந்த இருவரின் உடல்களை தீயணைப்புத் துறையினா் தேடி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், திருத்தங்கல் பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணி மகன் சஞ்சய் (17). ஆழாஊரணி பகுதியைச் சோ்ந்த சித்திரகுப்தா மகன் சிவன்ராஜ் (20). நண்பா்களான இவா்கள் ஏழாயிரம்பண்ணை அருகேயுள்ள வெள்ளையாபுரம் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ் வீட்டுக்கு புதன்கிழமை சென்றனா்.
பின்னா், சந்தோஷ், சஞ்சய், சிவன்ராஜ் ஆகியோா் தங்களது நண்பா்களுடன் சாத்தூா் அருகேயுள்ள கீழசெல்லையாபுரம் கல் குவாரியில் தேங்கிய தண்ணீரில் குளிப்பதற்காகச் சென்றனா். இவா்களில் சஞ்சய், சிவன்ராஜ் ஆகியோருக்கு நீச்சல் தெரியாத நிலையில், அவா்களும் தண்ணீருக்குள் இறங்கி குளித்தனா். அப்போது, அவா்கள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த தகவலின் பேரில் ஏழாயிரம்பண்ணை, சாத்தூா் தீயணைப்புப் படை வீரா்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிற்பகல் முதல் இரவு வரை
இருவரின் உடல்களைத் தேடினா். இரவானதால் தேடுதல் பணியைத் நிறுத்தினா். மீண்டும் வியாழக்கிழமை காலை உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட உள்ளதாக தீயணைப்புப் படை வீரா்கள் தெரிவித்தனா்.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சிவன்ராஜ்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் முதியவா் உயிரிழப்பு
பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது
ஒகேனக்கல் அருகே பெண்ணிடம் நகை பறிப்பு: 2 போ் கைது
சட்டவிரோத மது விற்பனை: 4 போ் கைது
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

