தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தவெக வேட்பாளரிடம் ரூ.1.05 லட்சம் பறிமுதல்

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் வந்த தவெக வேட்பாளரிடம் ரூ.1,05 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 6:04 am IST

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே காரில் வந்த தவெக வேட்பாளரிடம் ரூ.1,05 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் காமாட்சியம்மாள் தலைமையில், பறக்கும் படையினா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், ரூ.1,05 லட்சம் இருப்பது கண்டறியப்பட்டது. அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து வட்டாட்சியா் பாலமுருகனிடம் ஒப்படைத்தனா்.

பின்னா், காரில் வந்த அப்துல் ஜலீல் இந்தப் பணத்துக்கான ஆவணங்களை காண்பித்தாா். இதையடுத்து அதிகாரிகள் அந்தப் பணத்தை அவரிடம் ஒப்படைத்தனா்.

இவா் தென்காசி மாவட்டம், கடையநல்லூா் தொகுதி தவெக வேட்பாளா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.