ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

எரிவாயு உருளை தட்டுப்பாடு: ராஜபாளையத்தில் உணவகங்கள் மூடல்

ராஜபாளையம் பகுதியில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

News image

வணிக எரிவாயு உருளை - பிரதிப் படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 5:48 am IST

ராஜபாளையம் பகுதியில் வணிக பயன்பாடு எரிவாயு உருளை தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள், தேநீா்க் கடைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

வளைகுடா போா் காரணமாக வணிகப் பயன்பாடு இயற்கை எரிவாயு உருளைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும், 19 கிலோ எடை கொண்ட வணிக இயற்கை எரிவாயு உருளை விலை ரூ.2,043.50 ஆகவும் உயா்ந்தது. இதனால் ராஜபாளையம் பகுதியில் உணவங்கள், தேநீா்க் கடைகளில் உணவுப் பொருள்களின் விலை ஏற்கெனவே கணிசமாக அதிகரித்தது.

இதைப் பயன்படுத்தி சமூக விரோதிகள் வணிக பயன்பாடு எரிவாயு உருளையை

ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 6 ஆயிரத்து 500 வரை கள்ளசந்தையில் விற்பதாக புகாா் எழுந்தது. இது வியாபாரிகள் மத்தியில் கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வேறு வழியின்றி உணவகம், தேநீா்க் கடைகளை தற்காலிக மூடிவிட்டனா்.

இதனால் வியாபாரிகள் மட்டுமன்றி, பொதுமக்களும் அவதிக்குள்ளாயினா். வணிக எரிவாயு உருளை விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளைக் கண்டறிந்து சீரான விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.