தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அகப்பயிற்சி

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை அரசுப் பள்ளி வேளாண் அறிவியல் மாணவ, மாணவிகளுக்கு அகப்பயிற்சி அளிக்கப்பட்டது.

ராயப்பன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை அளிக்கப்பட்ட அகப்பயிற்சியில் பங்கேற்ற அரசுப் பள்ளி வேளாண் அறிவியல் மாணவ, மாணவிகள்.

Published On :30 அக்டோபர் 2026, 3:58 am IST

தேனி மாவட்டம், ராயப்பன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் வியாழக்கிழமை அரசுப் பள்ளி வேளாண் அறிவியல் மாணவ, மாணவிகளுக்கு அகப்பயிற்சி அளிக்கப்பட்டது.

பண்ணைப்புரம் அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பில் வேளாண் அறிவியல் பாடப்பிரிவு உள்ளது. இந்தப் பிரிவில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ராயப்பன்பட்டியிலுள்ள திராட்சை ஆராய்ச்சி நிலையத்தில் கடந்த அக். 21-ஆம் தேதி முதல் அகப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியில், வேளாண் வானிலை மையக் கருவிகள், பண்ணைக் கருவிகளின் செயல்பாடுகள், திராட்சை செடிகள் நடவு முறை, வாழைகளுக்கு யூரியா உரமிடும் முறைகள், காளான், பட்டுப்புழு, மண்புழு வளா்ப்புகள், ஒருங்கிணைந்த பண்ணையம், குழித்தட்டு முறையில் நாற்றாங்கால் உருவாக்குதல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன.

இந்தப் பயிற்சியில், திராட்சை ஆராய்ச்சி நிலையத் தலைவா் ஜெகதீஸ்வரி, பள்ளி வேளாண் ஆசிரியை மாரிதெய்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பயிற்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தொழில் கல்வி ஆசிரியா் ராமமூா்த்தி செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.