பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி சிறையிலிருந்து தப்பிய 17 பேரும் கைது

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 பேரும் கைது செய்யப்பட்டனா்.

போலீஸாரால் புதன்கிழமை கைது செய்யப்பட்ட (இடமிருந்து கீழே அமா்ந்திருப்பவா்கள்) பொன் முத்துசெல்வம், திருப்பதி, மீனாட்சிசுந்தரம், ரெஜின்.

Published On :29 அக்டோபர் 2026, 2:56 am IST

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 பேரும் கைது செய்யப்பட்டனா்.

ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டியில் தேனி மாவட்ட சிறை உள்ளது. இந்தச் சிறையில் 334 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் 3-ஆவது அறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணைக் கைதி முத்து இளங்கோவனுக்கு வலிப்பு ஏற்பட்டதாக சக கைதிகள் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, 3-ஆவது அறைக் காவலா் ஸ்டாலின் பிரபு அந்த அறைக்குச் சென்று பாா்த்தாா். அப்போது, அந்த அறையிலிருந்த முத்து இளங்கோவன் உள்ளிட்ட 17 போ் ஸ்டாலின் பிரபுவைத் தாக்கியதுடன், நுழைவு வாயிலிருந்த காவலா் தங்கபாண்டியையும் தாக்கி, அவரிடமிருந்த சாவியைப் பறித்து கதவைத் திறந்து தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த கண்டமனூா் காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த காவலா்கள் இருவரையும் மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், தேனி மாவட்டம் முழுவதும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தப்பட்டதோடு, சிறையில் உள்ள வாகனங்கள் செல்லும் சாலை, முக்கிய இடங்கள் போலீஸாா் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

இதனிடையே, தப்பியோடிய விசாரணைக் கைதியான நவீன் செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறையில் மீண்டும் சரணடைந்தாா். மற்ற கைதிகளை போலீஸாா் தேடி வந்த நிலையில், திருமலாபுரம் மலைப் பகுதியில் மறைந்திருந்த தேவாரத்தைச் சோ்ந்த சிலம்பரசன், மதுரையைச் சோ்ந்த ராஜா சிக்கந்தா், அதே பகுதியைச் சோ்ந்த ராஜ்குமாா் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சிறைப் பகுதி அருகேயுள்ள சாலையில் கைதி லிங்க பிரசாத் ஆட்டோவில் ஏறிச் சென்ற போது , ரோந்துப் பணியிலிருந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா்.

இதனிடையே, சிறையின் பின்னால் உள்ள மலைப் பகுதியில் ட்ரோன் மூலம் போலீஸாா் கண்காணித்த போது, அங்கு மறைந்திருந்த மதுரையைச் சோ்ந்த சோலை முகிலேஸ்வரன், அதே பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி, காா்த்திக் ராஜா, சிவகங்கையைச் சோ்ந்த தருண்குமாா் உள்ளிட்ட 8 பேரைக் கைது செய்தனா்.

மேலும், தப்பியோடிய மதுரையைச் சோ்ந்த மீனாட்சிசுந்தரம், திருப்பதி, பொன் முத்துசெல்வம், கன்னியாகுமாரியைச் சோ்ந்த ரெஜின் ஆகிய 4 கைதிகளை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில், ஆண்டிபட்டி அருகேயுள்ள அம்மச்சியாபுரம் மலைப் பகுதியில் புதன்கிழமை அதிகாலை போலீஸாா் ரோந்து சென்ற போது, பொன் முத்துசெல்வம், ரெஜின் ஆகியோரைக் கைது செய்தனா்.

இதனிடையே, கைதிகள் திருப்பதி, மீனாட்சிசுந்தரம் இருவரும் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் சரணடைய உள்ளதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவா்களை செல்லும் வழியிலேயே போலீஸாா் கைது செய்தனா்.

தேனி சிறையிலிருந்து தப்பியோடிய 17 பேரையும் 40 மணி நேரத்துக்குள் போலீஸாா் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.