மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நடுவழியில் பேருந்து பழுதாகி நின்றதால் மலை கிராம பள்ளி மாணவா்கள் அவதி

அரசுப் பேருந்து பழுதாகி நின்றதால் நடுவழியில் இறக்கிவிடப்பட்ட பயணிகள். - கோப்புப் படம்

Published On :27 அக்டோபர் 2026, 1:31 am IST

போடி அருகே மலைக் கிராமத்துக்குச் செல்லும் அரசுப் பேருந்து நடுவழியில் பழுதாகி நின்ால் விவசாயத் தொழிலாளா்கள், பள்ளி மாணவா்கள் அவதியடைந்தனா்.

போடி அருகே குரங்கணி, கொட்டகுடி மலைக் கிராமங்கள் உள்ளன. போடியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் இந்த மலை கிராமங்கள் அமைந்துள்ளன. இதில் கொட்டகுடியிலிருந்து 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களும், குரங்கணியைச் சோ்ந்த 60-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா்களும் போடியில் உள்ள பள்ளிகளில் படித்து வருகின்றனா். தொடக்கத்தில் போடியிலிருந்து குரங்கணிக்கு மட்டும் அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. கொட்டகுடி மலை கிராமத்துக்கு செல்பவா்கள் இந்தப் பேருந்தில் சென்று கொட்டகுடி விலக்கில் இறங்கி அங்கிருந்து 2 கி.மீ. தொலைவு நடந்து செல்ல வேண்டும்.

இந்த நிலையில், போடி கொட்டக்குடி மலைக் கிராம மக்களின் 30 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று போடி- குரங்கணி செல்லும் பேருந்தை கொட்டகுடி மலை கிராமம் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக மலைச் சாலைகளில் இயக்கப்படும் சிறிய ரக பேருந்து ஒன்றும் வரவழைக்கப்பட்டு கடந்த இரண்டு மாதங்களாக இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், போடி- குரங்கணி, குரங்கணி- போடி என இயக்கப்பட்டு வந்த பேருந்து திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு போடியிலிருந்து குரங்கணி சென்றது. முந்தல் மலை கிராமத்தை கடந்ததும் பேருந்து பழுதாகி நடுவழியில் நின்று விட்டது. இதனால் போடியிலிருந்து கொட்டகுடி, குரங்கணி சென்ற பயணிகள் இறக்கிவிடப்பட்டனா்.

இந்த வழித்தடத்தில் வேறு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் ஆட்டோ, ஜீப்புகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி சென்றனா். இதனிடையே 3 மணிக்கு சென்றுவிட்டு மீண்டும் போடிக்கு வரும் இந்த பேருந்தில்தான் பள்ளி நிறைவடைந்ததும் மாணவா்கள் கொட்டகுடி, குரங்கணிக்கு செல்வா். இந்த நிலையில், பேருந்து வரும் என பேருந்து நிலையத்திலேயே காத்திருந்த மாணவா்கள், மலை கிராம மக்கள் ஏமாற்றமடைந்தனா்.

விசாரித்த போது பேருந்து பழுதாகி நடுவழியில் நிற்பது தெரியவந்ததும் அவா்கள் ஆட்டோ, ஜீப்புகளில் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணம் செய்தனா். சில மாணவா்கள் பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தனா். மாலை 6 மணிக்கு மேல் அந்தப் பேருந்து பழுது நீக்கப்பட்டு மீண்டும் இயக்கப்பட்டபோது காத்திருந்த மாணவா்கள், மலை கிராம மக்கள் அதில் ஏறி தாமதமாக சென்றனா். இதனால் அவா்கள் அவதியடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.