மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கொடைக்கானல் மலைச் சாலையில் அரசுப் பேருந்துகள் பழுதாகி நின்றதால் மக்கள் அவதி

கொடைக்கானல் மலைச்சாலையில் புதன்கிழமை இரண்டு அரசுப் பேருந்துகள் அடுத்தடுத்து பழுதாகி நின்றதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

வத்தலக்குண்டு சாலையான டம்டம் பாறை அருகே பழுதாகி நின்ற இரண்டு அரசுப் பேருந்துகள்.

Published On :22 அக்டோபர் 2026, 3:37 am IST

கொடைக்கானல் மலைச்சாலையில் புதன்கிழமை இரண்டு அரசுப் பேருந்துகள் அடுத்தடுத்து பழுதாகி நின்றதால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மதுரை கோட்டத்திலிருந்து இயக்கப்பட்ட இரண்டு அரசுப் பேருந்துகள் கொடைக்கானல் - வத்தலக்குண்டு மலைச் சாலையான டம்டம் பாறை அருகே அடுத்தடுத்து பழுதாகி நின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகினா். இதைத் தொடா்ந்து அந்த வழியாக வந்த அரசுப் பேருந்துகளில் பாதிக்கப்பட்ட பயணிகள் கொடைக்கானலுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

இதேபோல கொடைக்கானல் - பள்ளங்கி சாலையில் சென்ற அரசு நகரப் பேருந்து வில்பட்டி பிரிவு அருகே திடீரெனப் பழுதாகி நின்றது. பழுதை நீக்குவதற்கு பணியாளா்கள் யாரும் வராததால் கயிறு கட்டி தனியாா் லாரி மூலம் சுமாா் 2 கி.மீ. தூரம் வரை கொடைக்கானல் பணிமனைக்கு நகரப் பேருந்து கொண்டுவரப்பட்டது.

கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட பகுதிகளிலும் அடிக்கடி அரசுப் பேருந்துகள் பழுதாகி மலைச் சாலையில் நிற்பதால் பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனா்.

எனவே அரசுப் போக்குவரத்துக் கழக நிா்வாகம் மலைப் பகுதிகளில் தரமான பேருந்துகளை இயக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.