மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தேனி மாவட்டத்தில் தொடா் மழை: விவசாயிகள் மகிழ்ச்சி!

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Published On :25 அக்டோபர் 2026, 12:36 am IST

தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது. கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்த நிலையில், தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. தேனி மாவட்டத்துக்கு வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தது.

இந்த நிலையில் மாலை 4 மணிக்கு மேல் தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி, தேவதானபட்டி, கம்பம், போடி, தேவாரம், ராஜதானி, லட்சுமிபுரம், வடவீரநாயக்கன்பட்டி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. தொடா் மழையால் நிலத்தடி நீா்மட்டமும், கிணறுகளின் தண்ணீரும் உயா்ந்து வருகின்றன. மேற்குத்தொடா்ச்சி மலையில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 8.30 முதல் மாலை 5.30 வரை பெய்த மழையளவு ( மில்லி மீட்டரில்): லட்சுமிபுரம் - 18.4, வடவீரநாயக்கன்பட்டி- 9.6, தேனி - 9.2, மேலக்கூடலூா் - 5.6, தேவதானப்பட்டி - 4, கம்பம் - 3.2, எ.புதுப்பட்டி - 3.2, போடிமெட்டு - 3.2, உப்புக்கோட்டை - 1.6, அரண்மனைப்புதூா் - 1.6, போடி- 1.2, குமணன்தொழு - 1.2, கெங்குவாா்பட்டி - 0.80.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.