மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போலி மருந்து விற்பனை வழக்கில் 6 பேருக்கு சிறை

தேனி மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமையாளா்கள் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகளும், மருந்தக உரிமையாளா்கள் மூவருக்கு தலா 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறை - பிரதிப் படம்

Published On :21 அக்டோபர் 2026, 3:11 am IST

தேனி மாவட்டத்தில் அரசால் தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்த நிறுவனத்தின் உரிமையாளா்கள் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகளும், மருந்தக உரிமையாளா்கள் மூவருக்கு தலா 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தேனி மாவட்டத்தில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த தகவல் அடிப்படையில், தேனி மண்டல மருந்துகள் ஆய்வாளா் சுடலை வேல்முருகையைா தேனியில் உள்ள மருந்தகங்களில் கடந்த 2013-இல் ஆய்வு செய்தாா். அப்போது, தடைசெய்யப்பட்ட மருந்துகளை மருந்தகங்களில் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் நிறுவன, மருந்தக உரிமையாளா்கள் 6 போ் கைது செய்யப்பட்டனா்.

இந்த வழக்கு தேனி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தாா்.

இந்த நிலையில், மருந்து நிறுவனத்தின் உரிமையாளா்கள் ரகுநாதன், பிரித்விராஜ், ஈஸ்வரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், மருந்தக உரிமையாளா்கள், பங்குதாரா்களான ரமேஷ், நவஜீவன், சிவகுமாா் ஆகியோருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.19.20 லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி அண்மையில் தீா்ப்பளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.