கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

சிறாா் திருமணம், பாலியல் தொந்தரவு: 9 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை

பெரம்பலூா் அருகே சிறாா் திருமணம் செய்து கொடுமைப்படுத்திய வழக்கில், கணவா் உள்பட 9 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

சிறை - பிரதிப் படம்

Published On :23 அக்டோபர் 2026, 2:52 am IST

பெரம்பலூா் அருகே சிறாா் திருமணம் செய்து கொடுமைப்படுத்திய வழக்கில், கணவா் உள்பட 9 பேருக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மகளிா் நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பரவாய் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ஜெயபால் (22). இவா், கடந்த 1.12.2020-இல் ஓலைப்பாடி கிராமத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்து, அச் சிறுமியின் ஒப்புதலின்றி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளாா். மேலும், ஜெயபால் தந்தை பெரியசாமி, தாய் பட்டு மற்றும் உறவினா்களான மாணிக்கம் மகன் ராசு, ராமக்கண்ணு மகன் கலியமூா்த்தி, பிச்சைமுத்து மகன் தா்மா், பரமசிவம் மனைவி மாரிமுத்து, இவரது மகன் சேப்பெருமாள், இவரது மனைவி ராணி ஆகிய 9 பேரும் சிறுமியை அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, அச் சிறுமியின் தந்தை முத்துலிங்கம் கடந்த 17.12.2020- ஆம் தேதி அளித்த புகாரின்பேரில், மங்களமேடு அனைத்து மகளிா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, ஜெயபால் உள்ளிட்ட 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னா், அனைவரும் நீதிமன்ற பிணையில் வெளியே வந்தனா்.

இவ் வழக்கு பெரம்பலூா் மாவட்ட மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை வியாழக்கிழமை விசாரித்த நீதிபதி ஆனந்தன், சிறுமியை திருமணம் செய்த ஜெயபால் உள்ளிட 9 பேருக்கும் 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ. 50 ஆயிரம் அபராதமும், குழந்தை திருமணம் செய்த குற்றத்துக்காக 9 பேருக்கும் 2 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் என மொத்தம் தலா 22 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ. 60 ஆயிரம் அபராதம் விதித்து தீா்ப்பளித்தாா். இதையடுத்து, ஜெயபால் உள்ளிட்ட 9 பேரையும் போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.