
கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி
கும்பக்கரை அருவியில் சீரான நீா்வரத்து ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தனா்.

கும்பக்கரை அருவியில் செவ்வாய்க்கிழமை சீராகக் காணப்பட்ட நீா்வரத்து.
தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் சீரான நீா்வரத்து ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை அனுமதி அளித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை முதல் கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்ததால், சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் திங்கள்கிழமை மழை குறைந்ததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானது, இதனால், அருவியில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.
மேலும், அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பு, நெகிழிப் பைகள், உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




