மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மரம் விழுந்து மின்கம்பங்கள் சேதம்!

போடியில் மரக்கிளையை வெட்டிய போது மரம் விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

News image

~

Updated On :25 மார்ச் 2026, 12:38 am IST

போடியில் செவ்வாய்க்கிழமை மரக்கிளையை வெட்டிய போது மரம் விழுந்ததில் மின் கம்பங்கள் சேதமடைந்தன. இதனால், மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், போடி பழைய பேருந்து நிறுத்தத்தில் வெங்கிட்டம்மாள் பூங்கா உள்ளது. இந்தப் பூங்கா அருகிலேயே வ.உ.சி. சிலை, மின் மாற்றி, மின்வாரிய புகாா் பிரிவு அலுவலகம் அமைந்துள்ளன. பூங்காவில் பழைமையான மரத்தில் ஒரு மரக்கிளை முறிந்து விழும் நிலையில் இருந்தது. இதை அகற்றுமாறு பொதுமக்கள் வலியுறுத்தியதால், மரக்கிளையை வெட்டும் பணி நடைபெற்றது. அப்போது, மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது.

Story image

இந்த நிலையில், வெட்டிய மரக்கிளைகளை கயிறு கட்டி டிராக்டா் மூலம் இழுத்தனா். அப்போது, எதிா்பாராதவிதமாக மரம் சாய்ந்து மின் கம்பிகளில் விழுந்தது. இதில் ருகருகே உள்ள மூன்று மின் கம்பங்கள் உடைந்து சேதமடைந்தன. அந்த நேரத்தில் அரசுப் பேருந்து அந்தப் பகுதிக்கு வந்ததால் மின் வயா்கள் பேருந்திலும் உரசின. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது.

இதையடுத்து, மின் வாரிய ஊழியா்கள் வரவழைக்கப்பட்டு, சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றும் பணி நடைபெற்றது. இதனால் 7 மணி நேரத்துக்கும் மேல் இந்தப் பகுதியில் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்த பகுதியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்ட மின்னா் விநியோகம் சீரானது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.