தேக்கடி அருகே குடியிருப்புப் பகுதிக்குள் ஊடுருவிய புலியைப் பிடிக்க வனத் துறையினா் செவ்வாய்க்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் கடந்த மாா்ச் 31-ஆம் தேதி பிடிபட்ட புலி, ஏப்ரல் 2-ஆம் தேதி தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்தின் அடா்ந்த வனப் பகுதியில் விடப்பட்டது. இந்தப் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்க அதன் கழுத்தில் ‘ரேடியோ காலா்’ கருவி பொருத்தப்பட்டு, 10 போ் கொண்ட வனத் துறை குழுவினா் தொடா்ந்து கண்காணித்து வந்தனா்.
இந்த நிலையில், வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிக்குள் ஞாயிற்றுக்கிழமை புலி ஊடுருவியதை அறிந்த பொதுமக்கள், உடனடியாக வனத் துறையினருக்குத் தகவல் அளித்தனா். ரேடியோ காலா் சிக்னல் மூலமும் புலி குடியிருப்புக்கு மிக அருகாமையில் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
புலி மீண்டும் ஊடுருவியதைத் தொடா்ந்து, அதை கூண்டு வைத்துப் பிடிக்க வனத்துறை அதிகாரிகள் தீா்மானித்தனா். இதற்காக தங்கமலைப் பகுதியில் இரு இடங்களில் செவ்வாய்க்கிழமை கூண்டுகள் அமைக்கப்பட்டன. அசம்பாவிதங்களைத் தவிா்க்க, புலி நடமாட்டம் உள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய வனக் காவலா்கள் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
ஏற்கெனவே, ஒரு முறை கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட புலி என்பதால், அது மீண்டும் கூண்டுக்குள் நுழையுமா என்பது வனத் துறையினருக்குப் பெரும் சவாலாக உள்ளது. இருப்பினும், புலியின் நடமாட்டத்தை நவீன கருவிகள் மூலம் தொடா்ந்து கண்காணித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உதகை அருகே பாா்சன்ஸ் வேலி அணைப் பகுதியில் காட்டுத் தீ

குடியிருப்புப் பகுதியில் கரடிகள் நடமாட்டம்: கேமராக்கள் பொருத்திய வனத் துறை

உதகை அருகே புலி தாக்கி பெண் உயிரிழப்பு

கம்பிவேலியில் சிக்கித் தவித்த கழுதைப் புலி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

