ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

குழந்தை திருமணத்தை தடுப்பேன் ஆண்டிபட்டி நாதக வேட்பாளா் கோமதி உறுதி

News image

வருசநாட்டில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்த ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கோமதி.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:18 am IST

ஆண்டிபட்டி பகுதியில் குழந்தை திருமணத்தை தடுத்து, அவா்களை பள்ளி, கல்லூரியில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதி நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா. கோமதி ஆண்டிபட்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளான கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு ஆகிய பகுதிகளில் வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

அப்போது, வருசநாடு மலைப்பகுதியில் உள்ள விவசாயிகளின் உரிமையைப் பெற நடவடிக்கை எடுப்பேன். வனப்பகுதியில் மலைமாடுகளை மேய்ச்சலுக்கு அனுப்புவதற்கு அனுமதி வாங்கித் தருவேன். வருசநாடு, ஆண்டிபட்டி பகுதிகளில் உள்ள கண்மாயை தூா் வாருவேன்.

ஆண்டிபட்டி பகுதியில் குழந்தைத் திருமணத்தை தடுத்து குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சோ்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா். இதில், நாதக கட்சியினா் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.